ஐநா பொதுச் செயலாளர் பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி..!
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடப் போவதாக 34 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரோரா அகான்ஷா தெரிவித்துள்ளார்.
கனடாவில் வசிக்கும் அவர் UNDP எனப்படும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் தணிக்கை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார். உலகின் உயர்மட்டத்தில் உள்ள பதவிக்குப் போட்டியிடப் போவதாக அரோரா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 75 ஆண்டுகளாக உலகிற்கு அளித்த வாக்குறுதிகளை ஐநா நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், அகதிகள் பாதுகாக்கப்படவில்லை என்றும் மனிதாபிமான உதவிகள் மிகக் குறைந்த அளவே செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments