எரிவாயு ஏற்றிச் சென்ற லாரி வெடித்து விபத்து: 10 பேர் காயம்

0 1911

ஆப்கானிஸ்தானில் எரிவாயு ஏற்றிச் சென்ற லாரி திடீரென வெடித்ததில் பத்து பேர் காயமடைந்துள்ளனர்.

அந்நாட்டின் ஹெரட் மாகாணத்தில் இஸ்லாம் குலா நகரில் உள்ள எல்லையோர சுங்கச் சாவடியில் வாகனங்கள் வரிசையில் காத்திருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு எரிவாயு லாரியில் திடீரென தீப்பற்றியது, அது வெடித்து சிதறியது.

இதனால் அதனை அடுத்து நின்றிருந்து பத்து வாகனங்களும் தீ பரவியது. இதில் பத்து பேர் படுகாயம் அடைந்தனர். இதை கண்டதும் அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments