தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 7 பிரிவை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வழிவகுக்கும் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள, 7 சாதியினரை உள்ளடக்கி, தேவேந்திர குல வேளாளர் என்று, ஒரே அடைமொழியுடன் குறிப்பிட வழிவகை செய்யும், சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் ஆதிதிராவிட சாதிகள் ஆணைக்கான சட்டம் 1950ல் திருத்தம் மேற்கொள்ள வழிவகை செய்யும், சட்டத்திருத்த மசோதாவை, மத்திய அமைச்சர் தாவர் சந்த் கெலாட், (Thawar Chand Gehlot), மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். இம்மசோதா, பட்ஜெட் கூட்டத்தொடரின், 2ஆவது அமர்வில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்படக் கூடும்.
அரசியலமைப்பு சாசன சட்டத்தில் செய்யப்படும் திருத்தம் தமிழ்நாட்டிற்கு மட்டும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments