இந்தியாவிலேயே முதன் முதலாக மீனவர்களுக்காக பிரத்யேக வானொலி “கடல் ஓசை எஃப் எம்”!
ராமேஸ்வரம் பகுதியில் அன்றாடம் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை வெளி உலகத்துடன் இணைக்கும் பாலமாக விளங்கி வருகிறது “கடல் ஓசை எஃப் எம்” என்ற வானொலி பண்பலை.
மீனவர்களின் மேம்பாட்டுக்காக பாம்பன் பகுதியில் கடந்த 16 ஆண்டுகளாக இயங்கி வரும் நேசக்கரங்கள் என்ற அமைப்பு சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த வானொலி ஒலிபரப்பை, கடலுக்குள் சுமார் 17 நாட்டிகல் வரை கேட்கலாம் என்று கூறப்படுகிறது.
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, சுனாமி, புயல், கடல் சீற்றம் போன்ற ஆபத்து காலங்களில் உரிய எச்சரிக்கை மற்றும் ஆலோசனைகள் வழங்குவது, கடலில் அதிக மீன்கள் கிடைக்கும் இடங்கள் குறித்த தகவல்களையும் இந்த பண்பலை வானொலி வழங்கி வருகிறது.
Comments