இந்தியாவில் டிக் டாக் செயல்பாட்டை விற்க பைட் டான்ஸ் நிறுவனம் பேச்சு
இந்தியாவில் டிக் டாக் செயல்பாட்டைப் போட்டியாளரான கிளான்ஸ் நிறுவனத்துக்கு விற்பதற்கு பைட் டான்ஸ் நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது.
கிழக்கு லடாக்கில் சீனப் படையினரின் அத்துமீறலை அடுத்து டிக் டாக் உட்படச் சீன நிறுவனங்களின் 59 செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து பைட் டான்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டது.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள தனது செயல்பாட்டைப் போட்டி நிறுவனமான கிளான்சுக்கு விற்பது குறித்து ஜப்பானின் சாப்ட்பேங்க் மூலம் பைட் டான்ஸ் பேச்சு நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Comments