பிரதமர் மோடியின் வருகையால் சென்னையில் போக்குவரத்து மாற்றம்

0 2803
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி, சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி, சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சென்னை பெருநகர எல்லைக்குள் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் நுழைய அனுமதி இல்லை.

கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல், ராயபுரத்தில் இருந்து பாரிமுனை, அண்ணா சாலையில் இருந்து ராயபுரம், சவுத்கெனால் சாலையில் இருந்து காந்தி சிலை ஆகிய 4 வழித்தடங்களில் செல்லும் மாநகர பேருந்துகள் மற்றும் தனிநபர் வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமரின் நிகழ்ச்சி நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கம் எதிரேஉள்ள ராஜா முத்தையா சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் இறங்கும் ஐஎன்எஸ் அடையாறு கடற்படைத் தளம் முதல் விழா நடக்கும் நேரு விளையாட்டரங்கம் வரை பிரதமரின் காரில் செல்லும் சாலைகள் முழுவதும் காவல்துறைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு உள்ளன.

சாலையின் இருபுறங்களிலும் தடுப்பு வேலிகள் அமைத்துப் பாதுகாப்புக்குக் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஆங்காங்கே உயர்கோபுரங்கள் அமைத்துக் கண்காணிக்கப்படுகிறது.

விழா நடக்கும் அரங்குக்கு வெளியில் 4 அடுக்குப் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் பத்தாயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேரு விளையாட்டரங்கப் பகுதியில் மட்டும் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட காவலர்கள் நிறுத்தப்பட உள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments