கூகுள், ஃபேஸ்புக், டுவிட்டர் சிஇஓக்கள் அமெரிக்க காங்கிரசில் ஆஜர்?

0 2895
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க், டுவிட்டர் சிஇஓ ஜேக் டோர்சி ஆகியோர் அடுத்த மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை முன் ஆஜராகி சாட்சியமளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க், டுவிட்டர் சிஇஓ ஜேக் டோர்சி ஆகியோர் அடுத்த மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை முன் ஆஜராகி சாட்சியமளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கூகுள் நிறுவன சிஇஒ சுந்தர் பிச்சையும் அவர்களுடன் ஆஜராகி சாட்சியம் அளிப்பார் என சொல்லப்படுகிறது.

ஆனால் எந்த காரணத்திற்காக இவர்கள் பிரதிநிதிகள் சபையில் ஆஜராக உள்ளனர் என்பது குறித்த விவரம் எதுவும் வெளியாகவில்லை.

இந்த 3 பேரும் கடந்த அக்டோபரில் செனட்டின் வர்த்தக நிலைக்குழுவின் முன்பு ஆஜராகினர்.

அப்போது இந்த நிறுவனத்தின் உள்ளடக்க மாற்றங்கள் குறித்து குடியரசு கட்சி எம்பிக்களும், அதிபர் தேர்தல் குறித்த தவறான தகவல்களை சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனநாயக கட்சி எம்பிக்களும் அவர்களிடம் விசாரணை நடத்தினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments