மத்திய அரசின் பல திட்டங்கள் ஏழைகளுக்கானவை-நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

0 2375
மத்திய அரசின் பல திட்டங்கள் ஏழைகளுக்கானவை என நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார்.

மத்திய அரசின் பல திட்டங்கள் ஏழைகளுக்கானவை என நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார்.

மக்களவையில் பட்ஜெட் குறித்த விவாதங்களுக்கு பதில் அளித்த அவர், அரசுக்கு நெருக்கமான பெருமுதலாளிகளுக்காக மட்டுமே திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுத்தார்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் பெரு முதலாளிகளுக்கு சாதகமான முடிவுகள் எடுக்கப்பட்டதாக நிர்மலா குற்றஞ்சாட்டினார்.

கொரோனா பரவலால் ஏற்பட்ட சவால்கள், நாட்டின் நீண்ட கால வளர்ச்சிக்கான சீர்திருத்த திட்டங்களை முன்னெடுப்பதில் மத்திய அரசுக்கு எந்த விதத்திலும் தடையாக இருக்கவில்லை என அவர் கூறினார்.

சுகாதாரம் குறித்து மத்திய பட்ஜெட் முழுமையான அணுகுமுறையை கொண்டுள்ளது என அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments