”தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரணமாக 3113 கோடி ரூபாய்”: மத்திய அரசு அறிவிப்பு
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்குப் பேரிடர் நிவாரணமாக மூவாயிரத்து 113 கோடி ரூபாய் கூடுதல் நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் வெட்டுக்கிளித் தாக்குதலாலும், ஆந்திரம், பீகார், தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் புயல் மழை வெள்ளம் ஆகியவற்றாலும் பயிர்கள் சேதமடைந்தன.
இதற்கு ஏற்கெனவே மத்திய அரசு உடனடி நிவாரண நிதி வழங்கியுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு கூடுதல் நிதியுதவியாக மூவாயிரத்து 113 கோடி ரூபாயைத் தேசியப் பேரிடர் நிவாரண நிதியத்தில் இருந்து வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் ஆந்திரத்துக்கு 281 கோடி ரூபாயும், தமிழகத்துக்கு 286 கோடியே 91 லட்ச ரூபாயும், புதுச்சேரிக்கு 9 கோடியே 91 லட்ச ரூபாயும் வழங்கப்பட உள்ளது. பீகாருக்கு ஆயிரத்து 255 கோடி ரூபாயும் மத்தியப் பிரதேசத்துக்கு ஆயிரத்து 280 கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளது.
Comments