"போராடும் உரிமை எந்த நேரமும், எல்லா இடங்களிலும் இருக்க முடியாது" - உச்ச நீதிமன்றம்
போராட்டம் நடத்தும் உரிமை எந்த நேரமும், எல்லா இடத்திலும் இருக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி சாகீன்பாக்கில் 2019 டிசம்பர் 14 முதல் 2020 மார்ச் 24 வரை நடைபெற்ற போராட்டம் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை விசாரித்த நீதிபதிகள், போராடும் உரிமை என்பது சில கடமைகளுக்கு உட்பட்டது என்றும், போராடும் உரிமை எந்த நேரமும் எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
போராட்டம் என்னும் பெயரில் பொது இடத்தைத் தொடர்ந்து ஆக்கிரமித்துக் கொள்வது பிறரின் உரிமைகளைப் பாதிக்கும் எனக் கூறிய நீதிபதிகள் மனுக்களைத் தள்ளுபடி செய்தனர்.
Comments