சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி பெற முனைப்பு காட்டும் ஆப்பிரிக்க நாடுகள்..!
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை பெற ஆப்பிரிக்க நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தின் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியின் ஆய்வுத் தரவுகள் எதிர்பார்த்த அளவு இல்லை என தென் ஆப்பிரிக்க அரசு விமர்சித்து உள்ள நிலையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிகளை பெற திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேநேரம் ரஷ்யா மற்றும் சீன தடுப்பூசிகளை பெறவும் முனைப்பு காட்டி வருகிறது. அதேபோல் நைஜீரிய அரசு சினோபார்ம் தடுப்பூசியை பெற சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜிம்பாப்வே நாட்டின் 60 சதவீத மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ள நிலையில் ரஷ்யா, சீனா, இந்தியாவுடன் தடுப்பூசி பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அதேநேரம் மத்திய அப்பிரிக்க நாடுகளில் முதல் நாடாக கினியா சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுள்ளது.
Comments