'இதுபற்றி நேருவிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும்'; பிரதமர் மோடி குறித்த ராகுல்காந்தியின் விமர்சனத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் பதிலடி
பிரதமர் மோடி சீனாவுக்கு பணிந்தது ஏன் என்று மக்களவையில் கேள்வி எழுப்பிய ராகுல் காந்தியிடம், இதுபற்றி நேருவிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சகம் பதிலடி கொடுத்தது.
சில இந்திய நிலப்பகுதிகளை சீனாவுக்கு தாரை வார்த்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
சீனா சில பகுதிகளில் இருந்து பின்வாங்க மறுத்துவிட்டதை சுட்டிக் காட்டிய ராகுல் காந்தி அப்பகுதிகளை விட்டுக் கொடுத்து சீனாவுக்கு மோடி பணிந்து விட்டதாக விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், 1962ம் ஆண்டு முதலே 43 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதியை சீனா சட்டவிரோதமாக ஆக்ரமித்து வருவதாகவும் சர்ச்சைக்குரிய அப்பகுதி இந்திய வரைபடத்தில் உள்ள பகுதிதான் என்றும் தெரிவித்தார்.
நேரு காலத்து அரசு எடுத்த முடிவுகள் தான் இதற்கு காரணம் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் தந்துள்ளது.
Comments