இன்று கூடுகிறது அமைச்சரவைக் கூட்டம்.. இடைக்கால பட்ஜெட்டுக்கான இறுதிவடிவம் கொடுக்கப்படுமா..?

0 3235
தமிழக விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம்: பயனாளிகளுக்கு இன்று ரசீதை வழங்கி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

தமிழகத்தில் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ததற்கான ரசீதை பயனாளிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த அறிவிப்பால், 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.

மேலும், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், பயிர்க்கடன் தள்ளுபடி செய்ததற்கான ரசீதை பயனாளிகளுக்கு வழங்கி இத்திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

இதனிடையே தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள சூழ்நிலையில், இம்மாத இறுதியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. சட்டசபை தேர்தலையொட்டி, பட்ஜெட்டில், முக்கிய அறிவிப்புகள், ஐந்தாண்டு சாதனைகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற உள்ளன.

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டுக்கான இறுதிவடிவம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments