உலக நாடுகளுக்கு இதுவரை 2.29 கோடி கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டது- வெளியுறவு அமைச்சகம்
பல்வேறு நாடுகளுக்கு இதுவரை 2 கோடியே 29 லட்சம் கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா வழங்கியுள்ளது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதுபற்றி விளக்கிய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, இவற்றில் 64 லட்சத்து 70 ஆயிரம் மருந்துகள் மானிய அடிப்படையிலும், 165 லட்சம் மருந்துகள் வர்த்தக அடிப்படையிலும் பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
வருகின்ற நாட்களில் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் பசிபிக் தீவு நாடுகளுக்கும் கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கப்பட கூடும் என்றும் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.
Comments