மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் தொடங்கப்படும் -சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் நேற்று தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த அவர், மதுரையில் எய்ம்ஸ் அமைக்கும் பணிக்காக ஆயிரத்து 264 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 12 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து கடன்தொகை பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர், பிரச்னைகள் விரைவில் மத்திய அரசால் தீர்க்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றார்.
Comments