பிப்.14-ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி : பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

0 2336
பிப்.14-ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி : பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

ரும் ஞாயிற்றுகிழமை தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், நிறைவடைந்த பல திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

3770 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ள சென்னை வண்ணாரப்பேட்டையிலிருந்து, விம்கோ நகர் வரையிலான பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் துவக்கி வைக்கிறார்.

நவீன அர்ஜூன்போர் பீரங்கியை இந்திய ராணுவத்திடம் பிரதமர் ஒப்படைப்பார். 2640 கோடி செலவில் கல்லணை வாய்க்காலை புதுப்பித்து, நவீனப்படுத்தி, விரிவாக்கம் செய்வதற்கான பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

1000 கோடி ரூபாய் மதிப்பில் செங்கல்பட்டு மாவட்டம் தையூர் என்னுமிடத்தில், 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும் ஐஐடி டிஸ்கவரி வளாகத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments