இந்தியா சார்பில் பல்வேறு நாடுகளுக்கு இதுவரை 2.29 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகள் வினியோகம்
பல்வேறு நாடுகளுக்கு இதுவரை 2 கோடியே 29 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகள் இந்தியா சார்பில் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், அதில் 64 லட்சம் டோஸ் மருந்துகள் விலையில்லாமல் உதவி செய்யும் நோக்கத்தில் அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். 165 லட்சம் டோஸ் மருந்துகள் வர்த்தக ரீதியில் விற்பனை செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இனி வர இருக்கும் வாரங்களில் ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா மற்றும் பசுபிக் தீவுகளிலுள்ள நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்துகள் வினியோகிகப்படும் என்று எதிர்பார்ப்பதாக அனுராக் ஸ்ரீவத்சவா கூறினார்.
Comments