லடாக்கில் படை விலக்கம்… வேகமாக இயங்கும் சீனா…

0 14373
லடாக்கில் படை விலக்கம்… வேகமாக இயங்கும் சீனா…

டாக் எல்லையில் இருந்து எதிர்பார்த்ததை விட வேகமாக சீனா படைகளை விலக்கி வருகிறது.

படை விலக்கம் தொடங்கிய 24 மணி நேரத்தில் 200 பீரங்கிகளையும், 100 கன ரக வாகனங்களையும் அந்நாட்டு ராணுவம் திரும்ப பெற்றுள்ளது.

லடாக்கில் கடந்த பல மாதங்களாக நீடித்த மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வர நடைபெற்ற 9 வது சுற்று பேச்சுவார்த்தையில் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி இரு நாடுகளும் படைகளை விலக்கி வருகின்றன. அதன்படி பாங்காங் சோ ஏரியின் வடக்கு பகுதியில் படைகளை வாபஸ் பெறும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.

சீன ராணுவம் 200-க்கும் மேற்பட்ட பீரங்கிகளையும் நூறு கனரக வாகனங்களையும் விரைவாக வாபஸ் பெற்றுள்ளது. இந்திய தரப்பு எதிர்பார்த்தை விட மிக வேகமாக சீனா படைகளை விலக்கிக் கொண்டுள்ளது. 

இதேபோல இந்தியாவும் நூற்றுக்கணக்கான பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களை வாபஸ் பெற்று வருகிறது.பாங்காங் சோ ஏரியின் வடக்கு பகுதியில் பல்வேறு மலை முகடுகள் உள்ளன.

இதில் 3-ம் எண் கொண்ட மலை முகட்டுக்கு இந்திய படைகள் திரும்பி வருகின்றன. 

சீன படைகள் 4-ம் எண் கொண்ட முகடு வரை வந்து முகாம் அமைத்திருந்தது. இப்போது அவர்கள் 8-ம் எண் முகட்டுக்கு திரும்பி செல்கின்றனர்.

அதற்கு இடைப்பட்ட பகுதியில் இருநாட்டு படைகளும் ரோந்து உள்ளிட்ட எந்த பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

3 நாட்களில் போர் டாங்கிகள், ஆயுத வாகனங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளைக்குள் அனைத்து போர் வாகனங்களும் வெளியேறிவிடும். இடைப்பட்ட பகுதியில் உள்ள சிறிய கட்டுமானங்கள், பதுங்கு குழிகளை அழித்துவிட வேண்டும் என்று இரு தரப்பும் முடிவு எடுத்துள்ளன.

இந்த பணிகள் அனைத்தையும் 15 நாட்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து பணிகளும் முடிந்த பிறகு, அடுத்த 48 மணி நேரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாங்காங் சோ ஏரியின் வடக்கு பகுதியில் படை வாபஸ் நடந்து வந்தாலும், தெற்கு பகுதியில் இன்னும் படைகள் வாபஸ் பெறப்படவில்லை.

அதேபோல டெப்சாங், காக்ரா ஹாட்ஸ்பிரிங்ஸ், டெம்சாக் ஆகிய இடங்களிலும் தொடர்ந்து இரு நாட்டு படைகளும் முகாமிட்டு இருக்கின்றன.

அந்த இடங்களில் இருந்து வாபஸ் பெறுவது தொடர்பாக அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments