"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
மத்திய அரசின் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 250 கோடி மோசடி செய்த கும்பலின் வங்கிக் கணக்குகள், பாஸ்போர்ட்கள் முடக்கம்
மத்திய அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி 250 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலின் பாஸ்போர்ட் மற்றும் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு அலுவலகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் போலி நியமன ஆணைகளை மின்னஞ்சலில் அனுப்பிக் கர்நாடகத்தைச் சேர்ந்த கும்பல் பலரிடம் மோசடி செய்துள்ளது. இது குறித்த புகாரில் சிபிசிஐடி காவல்துறையினர், மைசூரைச் சேர்ந்த மகாதேவய்யா, அவரது மகன் அங்கித், ஓசூரைச் சேர்ந்த ஓம் ஆகிய மூவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மோசடி மூலம் மூவரும் 250 கோடி ரூபாய் சொத்துச் சேர்த்ததாகத் தெரிவித்துள்ள சிபிசிஐடி அதிகாரிகள், மூவர் பெயரிலும் உள்ள வங்கிக் கணக்குகளையும் பாஸ்போர்ட்களையும் முடக்கியுள்ளனர். மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
Comments