நார்மல் டெலிவரி... காரில் கட்டி இழுத்து செல்லப்பட்ட அபாகா 3 குட்டிகளை ஈன்றது!

0 8453

கடந்த டிசம்பர் மாதத்தில் கேரளாவில் நாயை காரில் கயிற்றில் கட்டி இழுந்து சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது, அந்த நாய் 3 குட்டிகளை ஈன்றுள்ளது.

கொச்சி அருபே பரவூர் என்ற இடத்தில் யூசப் என்பவர் பெண் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இந்த நாயை காண ஆண் நாய் ஒன்று அடிக்கடி வந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த யூசப் கடந்த டிசம்பர் 11 -ஆம் தேதி நாயை தன் காரில் கட்டி இழுத்து சென்றார்.

இந்த சம்பவத்தையடுத்து யூசப் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, கேரளாவில் தயா என்ற விலங்குகள் நல அமைப்பில் உறுப்பினராக உள்ள கிருஷ்ணன் என்பவர் வீட்டில் அந்த நாய் பராமரிக்கப்பட்டு வந்தது. காயத்திலிருந்து மீண்டதும் அந்த நாய்க்கு அபாகா என்று செல்ல பெயரிடப்பட்டது.

கிருஷ்ணன் வீட்டில் புதிய வாழ்க்கையை தொடங்கிய அபாகா கர்ப்பமடைந்திருந்தது. இதையடுத்து, பரவூர் கால்நடை மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டது. கால்நடை மருத்துவர் சந்திரகாந்த் , அபாகாவின் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்தார். இந்த நிலையில், நேற்று அபாகா சுகபிரவசத்தில் 3 ஆழகிய ஆண் குட்டிகளை பெற்றெடுத்தது. தாயும் சேய்களும் நலமாக உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments