நீர்நிலைகளை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டியது மாநில அரசு, மாநகராட்சி அதிகாரிகளின் கடமை - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
நீர்நிலைகளை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டியது மாநில அரசு, மாநகராட்சி அதிகாரிகளின் கடமை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில், ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன 27 நீர்நிலைகளை கண்டுபிடித்து பாதுகாக்க கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
சென்னையைச் சுற்றி இருந்த பல நீர்நிலைகள் காணாமல் போயுள்ளன என குறிப்பிட்ட நீதிபதிகள், நீர்நிலைகள் வாழ்வாதாரத்துக்கு நுரையீரலைப் போல முக்கியமானது என்பதை உணர்ந்து அதிகாரிகள் அவற்றை பாதுகாக்க வேண்டும் என்றனர்.
சென்னை மாநகராட்சி மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், அரசு நிலங்கள், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் விவகாரத்தில் அரசியல் உள்ளிட்ட எந்த காரணங்களுக்கும் இடம் கொடுத்து விடக் கூடாது என அறிவுறுத்தினர்.
Comments