திரிணமுல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி தினேஷ் திரிவேதி திடீர் ராஜினாமா
திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தினேஷ் திரிவேதி, தனது எம்.பி பதவியை, திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய தினேஷ் திரிவேதி, இந்த ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார். மேற்குவங்கத்தில், வன்முறை தலைவிரித்தாடும்போது, மாநிலங்களவையில், தாம் அமைதியாக அமர்ந்திருப்பது, இயற்கைக்கு முரணானது என்றார்.
எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை, நில்லாது உழைமின் என்ற சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிக்கு ஏற்ப, மேற்குவங்கத்தின் வளர்ச்சிக்காக உழைக்கப் போவதாகவும், கூறியுள்ளார். தினேஷ் திரிவேதி, விரைவில் பாஜகவில் இணைவார் என்றும், தகவல்கள் வெளியாகியுள்ளன.
Comments