அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாக, விசாரணை ஆணையம் தகவல்

0 3774
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாக, விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாக, விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

துணை வேந்தர் சுரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

ஆணையத்தின் கால அவகாசத்தை மேலும் 3 மாதம் நீட்டிக்கக் கோரி அரசிடம் விண்ணப்பித்துள்ளதோடு, சுரப்பா மீதான குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்களை திரட்டியுள்ளதாகவும் கூறியுள்ளது.

அடுத்த வாரத்தில் மீண்டும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும், விரைவில் சுரப்பாவிடமும் நேரில் விசாரணை நடத்தவுள்ளதாகவும் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments