கடுங்குளிருடன் வடமாநிலங்களை வாட்டியெடுக்கும் பனிமூட்டம்...

0 1015
கடுங்குளிருடன் வடமாநிலங்களை வாட்டியெடுக்கும் பனிமூட்டம்...

ஞ்சாப், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில், இன்று காலையில், கடுங்குளிருடன், பனிமூட்டம் நிலவியது.

தலைநகர் டெல்லியில், பாலம் விமான நிலையம், சப்தர்ஜங் உள்ளிட்ட இடங்களில், 200 மீட்டர் இடைவெளியில் இருக்கும் பொருட்கள், எதிர்வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியது.

பஞ்சாப் மாநிலத்தில், அமிர்தசரஸ், அம்பாலா உள்ளிட்ட இடங்களில், நள்ளிரவு முதலே, கடுமையான குளிருடன், அடர் பனிமூட்டம் நிலவியது. இதனால், காலை 8 மணி வரையில், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி, வாகனங்கள் பயணித்தன.

இதேபோன்று, கிழக்கு உத்திரப்பிரதேசம், இராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களிலும், வாட்டும் குளிருடன், பனிமூட்டம் காணப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments