வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகள் - டுவிட்டர் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகள், விளம்பரங்களை உடனடியாக நீக்க கோரும் விவகாரத்தில், டுவிட்டர் நிறுவனம் உரிய விளக்கம் அளிக்க, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
இதுதொடர்பாக, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த, வினித் கோயங்கா என்பவர், பொதுநல மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.
அதில், சமூக வலைதளங்களில், அதிலும் குறிப்பாக டுவிட்டர் மூலம் பரவும் போலிச் செய்திகள், வெறுப்புணர்வைத் தூண்டும் தகவல்கள் மற்றும் விளம்பரங்கள் உள்ளிட்டவற்றைத் தடுக்கவும், அவற்றை தணிக்கை செய்யவும், புதிய விதிமுறைகளை வகுக்க, மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.
இந்த பொதுநல மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்தே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனு தொடர்பாக பதிலளிக்க, டுவிட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Comments