வாகனங்கள் குறித்த தரவுத் தளத்தை அணுகும் வசதியைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதன் மூலம் 111 கோடி ரூபாய் வருவாய் பெறப்பட்டுள்ளது

0 2764
வாகனங்கள் குறித்த தரவுத் தளத்தை அணுகும் வசதியைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதன் மூலம் 111 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

வாகனங்கள் குறித்த தரவுத் தளத்தை அணுகும் வசதியைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதன் மூலம் 111 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்தியச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாடாளுமன்றத்தில் உறுப்பினரின் வினாவுக்குப் பதிலளித்தார்.

அப்போது, வாகனங்கள், ஓட்டுநர்கள் குறித்த தரவுத்தளத்தை அணுகும் வசதியை BMW, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ், எல் அண்டு டி, மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட 170 நிறுவனங்களுக்கு வழங்கியதாகத் தெரிவித்தார்.

வாகனத் தொழில், சரக்குப் போக்குவரத்து, காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வாகனத் தரவுத் தளத்தை அணுகும் வசதி அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் அரசுக்கு 111 கோடியே 38 லட்ச ரூபாய் வருவாய் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments