கொடைக்கானலில் நிலவும் கடும் உறைபனியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!
கொடைக்கானலில் நிலவும் கடும் உறைபனியால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பெய்த தொடர்மழை காரணமாக கொடைக்கானலில் உறைபனி காலம் தாமதமாக தொடங்கியது. நாளுக்கு நாள் குளிரின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், இன்று காலையில் 4 டிகிரிக்கும் குறைவாகவே வெப்பநிலை பதிவானது.
மன்னவனூர் ஏரி, ஜிம்கானா நீர் பிடிப்பு பகுதி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான உறை பனி நிலவியது.
புல்வெளிகளில் பனி படர்ந்து வெள்ளை கம்பளம் விரித்தது போன்று இருந்தது. இலைகள், பூக்களின் மேல் சூழ்ந்திருந்த பனிக்கட்டிகள் வெண் முத்துகளாக ரம்மியமாக காட்சியளித்தது. பனி காரணமாக, கூக்கால், பழம்புத்தூர் பகுதிகளில் உள்ள வாழைகள் கருகி சேதமாகின.
Comments