கிழக்கு லடாக்கின் தெப்சாங் சமவெளியில் இருந்து சீனா படைகளை திரும்ப பெறுகிறதா? பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்

0 2046
கிழக்கு லடாக்கின் தெப்சாங் சமவெளியில் இருந்து சீனா படைகளை திரும்ப பெறுகிறதா? பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்

சீனப் படைகள் அத்துமீறி நுழைந்த, கிழக்கு லடாக்கின் வியூக முக்கியத்துவம் வாய்ந்த தெப்சாங் சமவெளி பற்றி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒரு வார்த்தைகூட சொல்லாதது ஏன் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கிழக்கு லடாக்கில் உள்ள நிலை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்ததை சுட்டிக்காட்டினார்.

தற்போது இந்திய படைகள் ஃபிங்கர் 3 பகுதியில் நிலை கொள்ளப்போவதாக தெரியவந்துள்ளது என குறிப்பிட்ட ராகுல்காந்தி, ஃபிங்கர் 4 பகுதி இந்திய எல்லைக்குட்பட்டது என்ற நிலையில், ஏன் ஃபிங்கர் 3 பகுதி நோக்கி நகர வேண்டும் என வினவிய ராகுல்காந்தி, இந்திய எல்லைக்குட்பட்ட பகுதியை மத்திய அரசு சீனாவுக்கு விட்டுக்கொடுத்து விட்டதா? என்றும் விமர்சித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments