22 மாதங்களாக ஒரு பயணிகூட ரயில் விபத்துகளில் உயிரிழக்கவில்லை -பியூஷ் கோயல்

0 1128
கடந்த 22 மாதங்களாக ஒரு பயணிகூட ரயில் விபத்துகளில் உயிரிழக்கவில்லை என ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கடந்த 22 மாதங்களாக ஒரு பயணிகூட ரயில் விபத்துகளில் உயிரிழக்கவில்லை என ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர், 2019ஆம் ஆண்டு மார்ச் 22ம் தேதி நடந்த விபத்தில் பயணி உயிரிழந்ததுதான், கடைசியாக ரயில் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு எனக் குறிப்பிட்டார்.

அதன்பின்னர் கிட்டத்தட்ட 2 வருடங்களாக, ஒரு பயணிகூட ரயில் விபத்துகளில் உயிரிழக்கவில்லை என பியூஷ் கோயல் தெரிவித்தார்.

புதிய மறுசீரமைக்கப்பட்ட ரயில்வே வாரியத்தில், முதன்முறையாக, ரயில் மற்றும் ரயில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ரயில்வே பாதுகாப்புக்கான இயக்குநர் ஜெனரல் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments