"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
”செல்போனில் சராசரியாக அதிக நேரம் செலவிடுபவர்கள் இந்தியர்கள்” நோக்கியா நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்..!
உலகிலேயே செல்போனில் சராசரியாக அதிக நேரம் செலவிடுபவர்கள் இந்தியர்கள் தான் என்பது நோக்கியா நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் செல்போன் டேட்டா பயன்பாடு 63 மடங்கு அதிகரித்துள்ளது. தனிநபர் டெட்டா நுகர்வு 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 76 சதவீதம் உயர்ந்துள்ளது.
சராசரியாக ஒருவர் சுமார் 5 மணி நேரம் செல்போனுடன் செலவிடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. யுடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் 55 சதவீதமும், இகாமர்ஸ் உள்ளிட்ட தளங்களில் 44 சதவீதமும் செல்போனை பயன்படுத்துகின்றனர்.
4 ஜி செல்போன் வைத்திருக்கும் 10 கோடி பேர் இன்னும் 2ஜி, 3ஜி சேவையையே பயன்படுத்தி வருவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
Comments