திருப்பதி கோயில் உண்டியல் வசூலை மிஞ்சியது ராஜஸ்தான் சன்வலியா சேத் கோயில் உண்டியல் வசூல்..! பணத்தை எண்ண முடியாமல் ஊழியர்கள் திணறல்

0 5859
திருப்பதி கோயில் உண்டியல் வசூலை மிஞ்சியது ராஜஸ்தான் சன்வலியா சேத் கோயில் உண்டியல் வசூல்..! பணத்தை எண்ண முடியாமல் ஊழியர்கள் திணறல்

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள சன்வலியா சேத் கோயில் உண்டியல் வசூல் திருப்பதி கோயிலின் உண்டியல் வசூலை விட அதிகமாக உள்ளது.

இக்கோயிலில் நேற்று முன்தினம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. உண்டியலில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததால் ஒரு கட்டத்தில் அதனை எண்ண முடியாமல் ஊழியர்கள் சோர்வடைந்தனர்.

இதனை தொடர்ந்து 2வது நாளாக உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. முதல் நாள் முடிவில் உண்டியலில் இருந்த 6 கோடியே 17 லட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவை எண்ணப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments