பாங்காங்சோ ஏரிக்கரை, ஃபிங்கர் 8 பகுதிகளில் இருந்து வெளியேறுகிறது சீனா..! பத்து மாதங்களாக ஆக்ரமித்த பகுதிகளை விட்டு படைகள் பின் வாங்கின
கிழக்கு லடாக் எல்லையில் உள்ள பாங்காங்சோ ஏரிக்கரையில் குவிக்கப்பட்ட பீரங்கிகள் உள்ளிட்ட படைகளை சீனா திரும்பப் பெற்று வரும் முதல் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஒன்பது சுற்றுகள் தொடர்ச்சியாக இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக இந்தியாவின் வலியுறுத்தலின்படி கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய நிலைப்பாட்டுக்கு படைகளை பின்னகர்த்த சீனா ஒப்புக் கொண்டுள்ளது.
ஃபிங்கர் 8 மலைப்பகுதிகளை விட்டு சீனப்படைகள் வெளியேறத் தொடங்கியுள்ளன.ஃபிங்கர் 4 முதல் 8 வரையிலான மலைப்பகுதிகளில் சீன ராணுவத்தினர் பல்வேறு பதுங்குக் குழிகளையும் முகாம்களையும் அமைத்துள்ளனர்.
இந்திய ராணுவத்தினர் ரோந்துப் பணிகளையும் சீன ராணுவம் தடுத்து வந்தது. தற்போது சீனப்படைகள் பின் வாங்கத் தொடங்கியிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
#IndianArmy video of ongoing disengagement process in #Ladakh | WATCH#IndoChina pic.twitter.com/CLxnfDwmRC
Comments