ஜாஸ் நடனத்தில் அசத்தி வரும் மாற்றுத்திறனாளி இளம்பெண் ,கால்களை உபயோகித்து பணிகளை செய்து அசத்தல்
பிரேசில் நாட்டில் இளம்பெண் ஒருவர், கைகள் இல்லை என்றாலும், தன்னிடம் தன்னம்பிக்கை அதிகம் உள்ளது என்று தனது லட்சியங்களை நோக்கி முன்னேறி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இரண்டு கைகளுமே இல்லாமல் பிறந்த பெலெரினா பியூனா சிறு வயது முதலே நடனத்தில் சாதிக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளார்.
பல்வேறு இன்னல்களுக்கு ஆளான பெலெரினாவுக்கு, அவரது தாயாரின் தைரியம் மற்றும் ஊக்கம் பெரிதளவு உதவியுள்ளது.
இதன்படி, தனது லட்சியத்தில் பின்வாங்காமல் விடா முயற்சியுடன் செயல்பட்டு வரும் பெலெரினா தற்போது ஜாஸ் வகை நடனத்தில் அசத்தி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் கால்களை பயன்படுத்தி அவர் செய்யும் பணிகள் காண்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
Comments