விமானக் கட்டணம் உயர்வு..!
விமானக் கட்டணம் பத்து முதல் முப்பது சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
கொரோனாவால் இரண்டு மாதம் முடக்கப்பட்ட உள்நாட்டு விமான சேவை கடந்த ஆண்டு மே மாதம் 21ம் தேதி முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
கொரோனா அச்சுறுத்தலால் விமானத்தின் பயணிகள் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்தக் கட்டுப்பாடு வரும் மார்ச் 31 வரை நீடிக்கிறது.
தற்போது 80 சதவீதப் பயணிகள் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.கட்டண விகிதம் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
பறக்கும் நேரம் 40 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை, ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை, ஒன்றரை மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை என தனித்தனி நேரத்தைப் பொருத்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் முன்னூறு ரூபாய் முதல் ஆறாயிரம் ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.
Comments