உண்மையிலேயே ராஜலட்சுமி சூப்பர் சிங்கர்தான்..! யூடியூப்பரால் உருவான சர்ச்சை

0 18638

மதுரமல்லியின் கிராமிய பாடலை சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியின் தங்கை கலைவாணியின் பாடலாக சித்தரித்து யூடியூபில் வெளியிட்ட சேனல் அந்த பாடலை தங்கள் தளத்தில் இருந்து நீக்கி உள்ளது. வியூவ்ஸ்க்காக வீடியோவில் செந்தில்கணேஷை கோர்த்துவிட்ட சேட்டை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

கிராமிய பாடகி மதுர மல்லி எழுதி பாடி யூடியூப்பில் 2 கோடி முறைக்கும் அதிகமாக பார்க்கப்பட்ட கிராமிய பாடலை, சூப்பர் சிங்கர் ராஜலெட்சுமியின் சகோதரி கலைவாணி எழுதியதாக, ராஜலட்சுமி மேடையில் பேசுவது போலவும், செந்தில் கணேஷை நினைத்து அந்த பாடல் பாடப்பட்டது போலவும் யூடியூப்பில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டது. 

இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில் தனது கவனத்துக்கு வந்ததும் அதிர்ச்சி அடைந்த பாடகி மதுர மல்லி, தனது பாடலை ராஜலட்சுமி கச்சேரிக்காக திருடி விட்டதாக காவல் ஆணையரிடம் ஆன் லைனில் புகார் அளித்தார்.

இது குறித்து விளக்கம் அளித்த சூப்பர் சிங்கர் ராஜலெட்சுமி, தான் தவறேதும் செய்யவில்லை என்றும் தான் மேடையில் மதுர மல்லியின் பாடல் என்று குறிப்பிட்டுத்தான் தனது தங்கையை பாட அழைத்ததாகவும், அந்த நிகழ்ச்சியை கத்தரித்து வெளியிட்ட ஆர்.ஏ. மீடியா என்ற யூடியூப் சேனல்காரர்கள் வேறொரு பாடலுக்கு சொன்ன கருத்தை தவறாக சித்தரித்து வெளியிட்டு விட்டதாக தெரிவித்தார்

உடனடியாக அந்த யூடியூப் சேனல் நிர்வாகத்திடம் அவர்களது தவறை சுட்டிக்காட்டியதும், தங்களது விஷூவல் எடிட்டர்கள் வீவ்ஸ்காக செய்த சேட்டை என்பதை ஒப்புக் கொண்டு , கலைவாணி சம்பந்தப்பட்ட அந்த சர்ச்சைக்குரிய பாடல் வீடியோவை ஆர்.ஏ. மீடியா நீக்கிவிட்டதாக ராஜலட்சுமி தெரிவித்தார்.

தனது சகோதரி கலைவாணி சொந்தமாக எழுதி பாடியது என்று, சிவன் பாடலை குறிப்பிட்டதாக விளக்கம் அளித்த ராஜலட்சுமி, அது தொடர்பான கலகலப்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்

மேடையில் ஒவ்வொரு பாடலையும் பாடுவதற்கு முன்பாக அந்த பாடலை இயற்றியது யார் ? என்று அறிமுகப்படுத்துவதை வழக்கமாக செய்துவருவதாக தெரிவித்த ராஜலட்சுமி, மதுர மல்லி அக்காவின் பெயரை மேடையில் சொன்னதற்கு ஆதாரமான முழுமையான வீடியோவையும் அவர் வெளியிட்டார். 

ஒரு பாடலை உருவாக்குவதில் உள்ள வலியை உணர்ந்தவர் என்பதால், கிராமிய பாடகி மதுர மல்லி தன் மீது தெரிவித்த புகாருக்கு ஆதாரத்துடன் உரிய விளக்கம் அளித்து மீண்டும் ஒருமுறை தன்னை சூப்பர் சிங்கராக நிரூபித்திருக்கிறார் ராஜலெட்சுமி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments