எண்ணி எண்ணி கைவலிக்குது... காணிக்கையில் திருப்பதியை மிஞ்சிய ராஜஸ்தான்!

0 5363

ராஜஸ்தான் கோவிலில் திருப்பதியை மிஞ்சும் உண்டியல் வசூல் குறித்தான செய்தி வைரலாகி வருகிறது.  

 கோயில்களுக்கான காணிக்கைகள் என்று வரும்போது, இந்தியர்களின் இதயங்கள் எவ்வளவு பெரியதாகவும், தாராளமயமாகி விடுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே.

பக்தி என்ற பெயரிலும், விசுவாசம் என்ற பெயரிலும், நிறைவேறிய வேண்டுதல்கள் என்ற பெயரிலும் இந்திய கோவில்களில் பக்தர்கள் தினமும் அதிக எண்ணிக்கையில் காணிக்கைகளை அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள திருப்பதி கோயில் மட்டுமே பணக்கார கோயில் என்று நம்மில் பலரும் நினைப்பது உண்டு.

ஆனால் இவற்றின் வரிசையில், ஜம்மு வைஷ்ணோ தேவி கோயில், ஷீரடி சாய் பாபா கோயில், மும்பையிலுள்ள சித்தி விநாயகர் கோயில்களும் அடங்கும். தற்போது இந்த வரிசையில், பக்தர்களின் நன்கொடைகள் மூலம் பிரபலமாகி இருக்கிறது ராஜஸ்தானின் சித்தோர்கர் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சன்வலியா சேத் கோயில் ( Shri Sanwaliaji seth temple).

இந்தக்கோவிலில் மாதம் மாதம் கோயில் உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். அப்படி கடந்த புதன்கிழமை, கோயில் நிர்வாகிகள், முன்னிலையில், உண்டியல் திறக்கப்பட்டுள்ளது. அப்போது, தங்கம் மற்றும் வெள்ளியுடன் பெரிய அளவிலான ரூபாய் நோட்டு குவியல்களும் இருப்பது கண்டறியப்பட்டது.

ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணியில் டஜன் கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டனர். ஆனால் ரூபாய் நோட்டுகளின் மிக அதிகமாக இருந்ததால், அவற்றை எண்ணி எண்ணி அவர்கள் சோர்வடைந்தனர்.

ஒரு வழியாக அன்றைய ரூபாய் நோட்டு எண்ணிக்கை முடிந்த பின்னர்,உண்டியலில் எண்ணப்பட்ட பணத்தின் மொத்த தொகை இதுவரை 6 கோடியே 17 லட்சத்து 12 ஆயிரத்து 200 ரூபாய் என கூறப்பட்டுள்ளது. இது தவிர, 91 கிராம் தங்கம், 4 கிலோ 200 கிராம் வெள்ளி ஆகியவையும் எடுக்கப்படன.

பண எண்ணிக்கையில் எந்த வித்தியாசமும் இல்லாம இருப்பதை உறுதிப்படுத்த, மந்திர் மண்டலத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான ரத்தன்குமார் சுவாமி, மந்திர் மண்டல வாரியத்தின் தலைவர் கன்ஹையதாஸ் வைஷ்ணவ் மற்றும் பிற அதிகாரிகளும் ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையின் போது உடன் இருந்தனர்.

ராஜஸ்தான் கோயிலில் பற்றிய இந்த செய்தி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments