இந்தியாவில் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைக்கு வருகிறது தடை..?
பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளை பரிவர்த்தனைக்கு பயன்படுத்தும் தனிநபர்கள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வழி செய்யும் வரைவு மசோதா நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது போன்ற டிஜிட்டல் கரன்சிகள், நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி கருதுவதால் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் ஏறத்தாழ 70 லட்சம் பேர் சுமார் 7000 கோடி ரூபாய் மதிப்பிலான கிரிப்டோகரன்சிகளை வைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments