புதிய வேளாண் சட்டத்தால் மண்டிகள் ஒழிந்துபோகும் - மக்களவையில் ராகுல்காந்தி பேச்சு
புதிய வேளாண் சட்டங்களால் மண்டிகள் ஒழிந்துபோகும் என்றும், இன்றியமையாப் பொருட்கள் சட்டத்துக்கு முடிவுகட்டப்படும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பேசிய அவர், முதல் சட்டம் அளவின்றி உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகளை எங்கிருந்தும் கொள்முதல் செய்ய அனுமதிப்பதால் மண்டிகள் ஒழிந்துவிடும் எனத் தெரிவித்தார்.
இரண்டாவது சட்டம் பெரிய வணிகர்கள் உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகளை எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைத்துக்கொள்ள அனுமதிப்பதால் இன்றியமையாப் பொருட்கள் சட்டம் முடிவுக்கு வரும் எனத் தெரிவித்தார்.
மூன்றாவது சட்டத்தின்படி விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்குச் சரியான விலை நிர்ணயிக்க பெருநிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளலாம் என்றும், நீதிமன்றம் செல்ல அனுமதியில்லை என்றும் தெரிவித்தார்.
Comments