பனி படர்ந்த இமயமலையில் போர் புரிய இந்திய ராணுவ வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி
பனி மூடிய மலை சிகரங்களில் போரிட இந்திய ராணுவ வீரர்களுக்கு சிறப்பு உயர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
காஷ்மீரின் குல்மார்கில் உள்ள அதி உயர் போர் பயிற்சி பள்ளியில் ராணுவ வீர ர்களுக்கு இரு விதமான பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒன்று குளிர் கால போர் பயிற்சி, மற்றொன்று மலை போர் பயிற்சி என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆண்டு ஒன்றுக்கு 540 வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும், இதற்காக பனியை தாங்கும் சிறப்பு ஆடைகள், பனிப்பொழிவை ஊடுருவி பார்க்க உதவும் கண்ணாடிகள், பனி பரப்பில் சறுக்கி செல்ல உதவும் கருவிகள் உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பயிற்சியால், இந்திய ராணுவ வீரர்கள், பனி படந்த இமயமலையிலும் போர் புரியும் தகுதி பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments