மெரினா கடலில் குளித்தபோது பேரலையில் சிக்கி 3 மாணவர்கள் மாயம்

0 1840
சென்னை மெரினா அண்ணா சதுக்கம் பின்புறம், கடலில் குளித்துபோது, பேரலையில் சிக்கிய மாயமான 3 மாணவர்களில், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சென்னை மெரினா அண்ணா சதுக்கம் பின்புறம், கடலில் குளித்துபோது, பேரலையில் சிக்கிய மாயமான 3 மாணவர்களில், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சென்னை ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்வதற்காக வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிவபாஜி, கோபிசென், ஆகாஷ் உள்ளிட்ட 5 மாணவர்கள், மெரினாவிற்கு குளிக்க வந்துள்ளனர்.

பிற்பகல் பொழுதில், ஐவரும் குளித்துக் கொண்டிருந்தபோது, அதில், 3 பேர் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு, மாயமாகினர்.

தகவறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், மீனவர்களுடன் இணைந்து, சிவபாஜி என்ற மாணவரின் சடலத்தை மீட்டனர்.

கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு மாயமான, கோபிசென் மற்றும் ஆகாஷ் ஆகியோரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments