கரடியாருக்கு வந்த துயரம் ...ஆதரவு கரம் நீட்டிய வனத்துறை!

0 3518

நீலகிரி மாவட்டத்தில், காலி தண்ணீர் தொட்டியில் விழுந்த கரடியை, 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் மீட்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே, மசினகுடி பொக்காபுரம் காட்டில் ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன.   வனப்பகுதியில் உள்ள மிருகங்கள் தண்ணீர் தேடி  ஊருக்குள் வருகின்றன. அப்படி,  தண்ணீர் குடிக்கச்  சென்ற ஆண் கரடி ஒன்று, தண்ணீர் குடிக்க சென்றது. 

தனியாருக்கு எஸ்டேட்டுக்குள்  சொந்தமான காலி தண்ணீர் தொட்டிக்குள் எட்டிப் பார்த்த கரடி அதற்குள் தவறி விழுந்தது. தொடர்ந்து, வெளியேற முயற்சி செய்த கரடி முயற்சிகள் பலனளிக்காமல் போனது. காலி தண்ணீர் தொட்டிக்குள் இங்கும் அங்கும் இங்கும் கத்திக்கொண்டே ஓடி கொண்டிருந்தது. கரடியின் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த உதகை வனத்துறையினர், சோர்வடைந்த கரடிக்கு சாப்பிட பழங்களும் தண்ணீரும் கொடுத்தனர்.  தொடர்ந்து, கரடி மேலே வருவதற்காக மரக்கிளைகளால் ஆன ஏணி ஒன்றிணையும் வனத்துறையினர் அமைத்தனர். சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு ஏணியை லாவகமாகப் பற்றிக்கொண்டு மேலே வந்த கரடி வனப்பகுதிக்குள் ஓடியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments