மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்தர தலைவராக கமல் மட்டுமே இருப்பார்… கட்சி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

0 4143
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்தர தலைவராக கமல் மட்டுமே இருப்பார்… கட்சி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

க்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்தர தலைவராக கமல்ஹாசனை முன்மொழிந்து அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டம் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கமல்ஹாசனுக்கு மட்டுமே உள்ளது, கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும், பொள்ளாச்சி  பாலியல் விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments