புதிய வேளாண் சட்டங்கள் விருப்பத் தேர்வுதான் முன்னரே உள்ள எந்த ஏற்பாட்டையும் அது பறிக்காது என பிரதமர் மோடி உறுதி

0 1241
புதிய வேளாண் சட்டங்கள் விருப்பத் தேர்வுதான் முன்னரே உள்ள எந்த ஏற்பாட்டையும் அது பறிக்காது என பிரதமர் மோடி உறுதி

புதிய வேளாண் சட்டங்கள் விருப்பத் தேர்வுதான் என்றும், முன்னரே உள்ள எந்த ஏற்பாட்டையும் அது பறிக்காது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பேசினார்.

அப்போது புதிய வேளாண் சட்டங்களின் ஒவ்வொரு பிரிவு குறித்தும் விரிவாகப் பேச்சு நடத்தவும், அவற்றில் மாற்றங்களைச் செய்யவும் அரசு தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.

நம்பிக்கையுடனும் தீர்மானத்துடனும் நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டிய நேரமிது என்றும் குறிப்பிட்டார்.

சீர்திருத்தங்கள் தொடரும் என்றும், புதிய சட்டங்கள் விருப்பத் தேர்வுதான் என்றும், முன்னரே உள்ள எந்த ஏற்பாடும் பறிக்கப்படாது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments