உத்ரகாண்ட் கிரிக்கெட் அணியில் முஸ்லீம் வீரர்களுக்கு முன்னுரிமை என குற்றச்சாட்டு - அணியின் பயிற்சியாளர் வாசிம் ஜாஃபர் மறுப்பு
முஸ்லீம் வீரர்களுக்கு உத்ரகாண்ட் கிரிக்கெட் அணியில் முன்னுரிமை அளித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த வாசிம் ஜாஃபர் மறுத்துள்ளார்.
உத்ரகாண்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த வாசிம் ஜாஃபர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
உத்தரகாண்ட் கிரிக்கெட் அசோசியேஷன் அதிகாரிகள் தகுதியற்ற வீரர்களை அணிக்கு தேர்ந்தெடுப்பதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், வாசிம் ஜாஃபர்இஸ்லாமிய வீரர்களுக்கு சாதகமாக செயல்படுகிறார் என அணி வீரர்கள் தெரிவித்ததாக, உத்ரகாண்ட் மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் கூறியிருந்தார்.
இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள வாசிம் ஜாஃபர், இந்த குற்றச்சாடு மிகவும் வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
Comments