வன்முறையை தூண்ட உதவினால் சமூக வலைதளங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் எச்சரிக்கை
பொய் செய்திகளை பரப்பி வன்முறையை தூண்ட உதவினால் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார்.
மாநிலங்களவையில் பேசிய அவர், டுவிட்டர், முகநூல், வாட்ஸ்ஆப், லிங்க்ட்இன் உள்ளிட்ட செயலிகளை நேரடியாக குறிப்பிட்டு இந்த எச்சரிக்கையை விடுத்தார். இந்த நிறுவனங்களுக்கு இந்தியாவில் கோடிக்கணக்கான பின்தொடர்பாளர்கள் உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவில் சுதந்திரமாக தொழில் செய்து பணம் சம்பாதிக்க அவற்றுக்கு அனுமதி இருந்தாலும், நாட்டின் அரசியலமைப்புச் சட்டங்களை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயம் என்றார்.
சமூக ஊடகங்களை அரசு மதிப்பதாக குறிப்பிட்ட அவர், டிஜிட்டல் இந்தியாவில் அவற்றுக்கு முக்கிய பங்கு உள்ளது என்றார்.அதே நேரம் அது தவறாகப் பயன்படுத்தப்பட்டு வன்முறை தூண்டப்பட்டால் அரசு நடவடிக்கை பாயும் என ரவி சங்கர் பிரசாத் கூறினார்.
Comments