ஜம்மு-காஷ்மீர் குறித்த கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை - அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர்
ஜம்மு காஷ்மீர் குறித்த தங்களது கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 4ஜி மொபைல் சேவை மீண்டும் துவக்கப்பட்டதை வரவேற்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் தெற்காசிய பிரிவு டுவிட் செய்துள்ளது.
இது குறித்து அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் (Ned Price) வாஷிங்டனில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, காஷ்மீர் பிரச்சனை இந்திய-பாகிஸ்தான் போராக மாறுவதை தடுக்க வேண்டும் என்பதே இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடாக உள்ளது.
ஜம்மு காஷ்மீர் பிரச்சனை இருநாடுகளுக்கும் இடையேயான பிரச்சனை மட்டுமே என்பதுடன் அதில் தலையிட எந்த 3 ஆம் நாட்டுக்கும் உரிமை இல்லை என்பதையும் அமெரிக்கா எற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments