தை அமாவாசையையொட்டி ராமேஸ்வரத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற தீர்த்தவாரி திரளான பக்தகள் சாமி தரிசனம்
தை அமாவாசையையொட்டி ராமேஸ்வரத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தீர்த்தவாரியையொட்டி, ராமநாதசுவாமி பருவதவர்த்தினி அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து தங்க ரிஷப வாகனத்தில் புறப்பட்டு அக்னி தீர்த்த கடற்கரை மண்டபத்திற்கு ஊர்வலமாக வந்தடைந்தார்.
பின்னர் அம்பாளுக்கு, கடற்கரையில் தீர்த்தவாரியுடன், சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடைபெற்றது.
இதனிடையே தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள் 22 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
Comments