மதுரை மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் 102 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

0 1116
மதுரை மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் 102 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

துரை மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் 102 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் 64 பேர், பிப்ரவரி மாதத்தில் தற்போது வரை 38 பேர் என மொத்தம் 102 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பால் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 85 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மீதமுள்ள 15 பேர் மதுரை அரசு மருத்துவமனை உள்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருந்து தெளித்தல், குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் 1087 களப்பணியாளர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், டெங்குவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments