பிரிட்டனில் மேலும் இரண்டு மரபணு மாற்ற வைரசுகள் கண்டுபிடிப்பு.. தடுப்பூசியால் புதிய வைரசை கட்டுப்படுத்த முடியாது என தகவல்

0 2302
பிரிட்டனில் கொரோனா தொற்று இதுவரை கட்டுக்குள் வராத நிலையில், மேலும் இரண்டு மரபணு மாற்ற வைரசுகள் அடையாளம் காணப்பட்டிருப்பது சுகாதார அதிகாரிகளிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

பிரிட்டனில் கொரோனா தொற்று இதுவரை கட்டுக்குள் வராத நிலையில், மேலும் இரண்டு மரபணு மாற்ற வைரசுகள் அடையாளம் காணப்பட்டிருப்பது சுகாதார அதிகாரிகளிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

பிரிஸ்டல் மற்றும் லிவர்பூலில்  இந்த இரண்டு மரபணு மாற்ற கொரோனா வைரசுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. லிவர்பூர் மரபணு மாற்ற வைரஸ் மூலம் 55 தொற்றுகளும், பிரிஸ்டல் வைரஸ் மூலம் 14 தொற்றுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தி சன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்த வைரசுகளில் E484K எனப்படும் தென்னாப்பிரிக்க வைரசின் மரபியல் கூறுகள் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மரபியல் மாற்ற வைரசுகளை இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளால் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறப்படுகிறது.

இதன் எதிரொலியாக, பிரிட்டனுக்கு வரும் பயணிகள் குவாரண்டைனில் இருக்கும் போது இரண்டு கொரானா சோதனைகளை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே பிரிட்டனின் புதிய ஊரடங்கு விதிகளின் படி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 33 நாடுகளில் உள்ளவர்களுக்கு பிரிட்டனில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments