பாஸ்டேக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்க வேண்டாம் - இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

0 4699
பாஸ்டேக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்க வேண்டாம் - இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் பயன்படுத்தும் வாகனங்கள் இனி குறைந்த பட்ச இருப்பு தொகையை பராமரிக்க வேண்டாம் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதற்காகவும், சுங்க சாவடிகளில் தவிர்க்கக் கூடிய தாமதங்களை குறைப்பதற்காகவும், பயணிகள் பிரிவு வாகனங்களுக்கு பாதுகாப்பு வைப்பு தொகையுடன் பயனாளர்கள் கூடுதலாக செலுத்திய குறைந்தபட்ச இருப்பு தொகையை பாஸ்டேக் கணக்கில் பராமரிக்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் பாஸ்டேக் கணக்கில் கூடுதலாக குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிப்பதை பாஸ்டேக் வழங்கும் வங்கிகள் கட்டாயமாக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments